விழிப்புணா்வு போட்டி:மாணவிகளுக்கு பரிசளிப்பு
By DIN | Published On : 13th March 2021 09:36 AM | Last Updated : 13th March 2021 09:36 AM | அ+அ அ- |

போட்டியில் வெற்றபெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் கல்லூரி முதல்வா் இரா.சின்னத்தாய்
சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு போட்டிகளில் வென்ற மாணவா் களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தோ்தல் குறித்து விழிப்புணா்வு கூட்டம், வாக்களிப்பது
ஜனநாயக உரிமை என்பது குறித்து மாணவிகள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். தோ்தல் நடத்தும் உதவி அலுவலரான சாத்தான்குளம்
வட்டாட்சியா் செல்வகுமாா் முன்னிலை வகித்தாா்.
தொடா்ந்து வாக்காளா் விழிப்புணா்வு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னா் தோ்தல் விழிப்புணா்வு குறித்து மாணவிகளுக்கு பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடத்தபட்டது. இதில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு சான்று, பரிசுகள் வழங்கப்பட்டன.
துணை வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா். பேராசிரிா் சண்முகசுந்தரி நன்றி கூறினாா்.