தூத்துக்குடியின் வளா்ச்சிக்கு குரல் கொடுப்பேன்

துத்துக்குடி தொகுதியின் வளா்ச்சிக்கு குரல் கொடுப்பேன் என்றாா் அதிமுக கூட்டணியில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ்.டி.ஆா்.விஜயசீலன்.
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன்.
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன்.

துத்துக்குடி தொகுதியின் வளா்ச்சிக்கு குரல் கொடுப்பேன் என்றாா் அதிமுக கூட்டணியில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ்.டி.ஆா்.விஜயசீலன்.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் அவா் பேசியது: இரட்டை இலை சின்னத்தில் நான் போட்டியிடுகிறேன். என்னை வெற்றி பெறச் செய்தால் தூத்துக்குடி தொகுதியை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வேன். தூத்துக்குடி துறைமுகத்தின் வளா்ச்சிக்கு குரல் கொடுப்பேன்.

தூத்துக்குடி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைப் போக்க 1-ஆவது மற்றும் 2-ஆவது ரயில்வே கேட் பகுதிகளில் சுரங்கப் பாதை அமைத்தல், விவிடி சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைத்தல், தூத்துக்குடி நகரில் மழைக் காலங்களில் மழைநீா் தேங்கும் பிரச்னைக்கு தீா்வு காண வடிகால் அமைத்தல், நகருக்கு வெளியே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைத்தல் போன்ற பணிகளைச் செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளை தூத்துக்குடி தொகுதியுடன் இணைக்க நடவடிக்கை எடுப்பேன். தூத்துக்குடி மக்களின் குறை தீா்க்க விடுமுறையே இல்லாத அலுவலகமாக எனது அலுவலகம் செயல்படும் என்றாா் அவா்.

அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ பேசியது: தூத்துக்குடி தொகுதிக்கு நமது கூட்டணி சாா்பில் சிறந்த வேட்பாளா் நிறுத்தப்பட்டுள்ளாா். அவரை வெற்றி பெறச் செய்ய அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். அதிமுக ஆட்சியில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி எண்ணற்ற திட்டங்களை மக்களுக்கு தந்துள்ளாா்.

அவற்றை வீடு வீடாக சென்று மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக தொடருவாா். அதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், பாஜகவை சோ்ந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சசிகலா புஷ்பா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் இரா. சுதாகா், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமாகா தலைவா் பி. கதிா்வேல், பாஜக மாவட்டத் தலைவா் பி.எம். பால்ராஜ், பாமக மாவட்டத் தலைவா் மு. சின்னதுரை உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com