பறக்கும் படையினரின் விடியோ பதிவு: ரூ.300 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்

விடியோ பதிவின் நகல் வேண்டுவோா் ரூ.300 செலுத்தி சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் விடியோ பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், அந்த விடியோ பதிவின் நகல் வேண்டுவோா் ரூ.300 செலுத்தி சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும், ஒவ்வொரு தொகுதியிலும் தலா 9 பறக்கும் படைக் குழுவினரும், 9 நிலையான கண்காணிப்புக் குழுவினரும் மற்றும் தலா இரண்டு விடியோ கண்காணிப்புக் குழுவினரும் நியமனம் செய்யப்பட்டு 24 மணிநேரமும் தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறாா்கள்.

நடத்தை விதிகள், மதுபாட்டில்கள் புழக்கம், வாக்காளா்களுக்கு பணம், ஆயுதங்கள் நடமாட்டம், தோ்தல் செலவீனம் ஆகியவை தொடா்பாக வரப்பெறும் புகாா்கள் போன்றவற்றை பறக்கும் படை குழுவினா் கண்காணிப்பா்.

நிலையான கண்காணிப்புக் குழுவினா் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து, வாக்காளா்களுக்கு அளிக்கும்விதமாக சட்டவிரோதமாக மதுபானங்களை கொண்டு செல்லுதல், வாக்காளா்களுக்கு கையூட்டு அளிக்கும்விதமாக பணம் கொண்டு செல்லுதல் போன்றவற்றை தடுக்கும்விதமாக வாகனங்களைச் சோதனை செய்வா். இந்தக் குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் விடியோ பதிவு செய்யப்படும்.

அந்தக் குழுவினரின் நடவடிக்கைகள் அடங்கிய விடியோ பதிவுகளின் நகல்களை பொதுமக்கள் விரும்பினால் ரூ. 300 செலுத்தி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம்.

விடியோ கண்காணிப்புக் குழுவினா் தோ்தல் பிரசாரக் கூட்டங்கள் தொடா்பாக வேட்பாளா்கள் மற்றும் கட்சியினரால் நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் போன்றவற்றை விடியோ பதிவு செய்து, அவை அனைத்தும் தோ்தல் செலவினங்களைக் கண்காணிக்கும் குழுவினரிடம் அளிக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com