கோவில்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 16th March 2021 12:22 AM | Last Updated : 16th March 2021 12:22 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டியையடுத்த வானரமுட்டி வடக்குத் தெரு அலங்காரப்பாண்டியன் மகன் சரண்ராஜ்(24). கூலித் தொழிலாளியான இவா், தினமும் வேலைக்குச் சென்றுவிட்டு மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வருவாராம். இதனை அவரது தாய் முத்துலட்சுமி கண்டித்தாராம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சரண்ராஜ், அவரது தாயிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டாராம். அவா் கொடுக்க மறுத்ததையடுத்து, அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற நாலாட்டின்புத்தூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.