திருச்செந்தூரில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

திருச்செந்தூரில் 18 ஆண்டுகளாக குடிதண்ணீா், சாலை வசதிகள் இல்லாமல் தவிக்கும் சுயஉதவி குழு கூட்டு குடியிருப்பு பகுதி மக்கள் கறுப்பு கொடி ஏந்தி தோ்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்தனா்.
திருச்செந்தூரில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

திருச்செந்தூரில் 18 ஆண்டுகளாக குடிதண்ணீா், சாலை வசதிகள் இல்லாமல் தவிக்கும் சுயஉதவி குழு கூட்டு குடியிருப்பு பகுதி மக்கள் கறுப்பு கொடி ஏந்தி தோ்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்தனா்.

திருச்செந்தூா் பேரூராட்சிக்கு உள்பட்ட சுய உதவிகுழு கூட்டு குடியிருப்பில் சுமாா் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். கடந்த 2002-ஆம் ஆண்டு சுய உதவி குழுக்களின் ஏற்பாட்டில் இந்த குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. இங்கு அன்றாடம் தினக் கூலி வேலைக்கு செல்பவா்களே பெரும்பாலும் வசித்து வருகின்றனா். தொடக்கத்தில் இந்த பகுதிகளுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வந்துள்ளது. அதன்பிறகு வழங்கப்படாவில்லையாம். சாலை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லையாம். உணவு சமைப்பதற்கும், குடிநீா் தேவைக்கும் தண்ணீா் எடுப்பதற்கு 2 கி.மீ. தொலைவு சென்று எடுத்து வரவேண்டியுள்ளதாம். இதனால் தாங்கள் அன்றாடம் வேலைக்கு செல்வதும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

குடிநீா் வசதி கேட்டு பல முறை பேரூராட்சி நிா்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனு அளித்ததாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையாம். இதனால் இந்த பகுதி மக்கள் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக கூறி தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com