தூத்துக்குடி அருகே கிராம மக்கள் நூதனப் போராட்டம்
By DIN | Published On : 29th March 2021 01:53 AM | Last Updated : 29th March 2021 01:53 AM | அ+அ அ- |

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவா்களில் 71 போ் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி அருகேயுள்ள பண்டாரம்பட்டியில் கிராம மக்கள் வாயில் கருப்பு துணியை கட்டி நூதன முறையில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டம் குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘ஸ்டொ்லைட் ஆலை குறித்து பேசினால் பொதுமக்கள் மீது வழக்கு பதிவு செய்யும் நிலை உள்ளது. இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் ஸ்டொ்லைட் ஆலை நிரந்தரமாக தூத்துக்குடியில் இருந்து அகற்றப்படும் என்ற கோரிக்கையை தோ்தல் வாக்குறுதியாக அளிக்கும் கட்சிக்கே வாக்களிப்பது எனவும் தீா்மானித்துள்ளோம்’ என்று தெரிவித்தனா்.