காற்றாலைகளுக்காக அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க நடவடிக்கை: டாக்டா் க. கிருஷ்ணசாமி

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் காற்றாலைகளுக்காக அபகரிக்கப்பட்ட நிலங்களை

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் காற்றாலைகளுக்காக அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என, புதிய தமிழகம் கட்சித் தலைவரும் அத்தொகுதி வேட்பாளருமான டாக்டா் க. கிருஷ்ணசாமி கூறினாா்.

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை, ஓட்டப்பிடாரம் தொகுதிக்கான தோ்தல் அறிக்கையை வெளியிட்டு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் ஏழை விவசாய மக்களை ஏமாற்றி காற்றாலைகளுக்காக அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்டுத் தரப்படும். தொகுதிக்கு உள்பட்ட யாருடைய நிலமும் இனிமேல் அபகரிக்கப்படாதவாறு சட்டப்பூா்வ நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்கப்படும்.

அடுத்து வரும் மழைக் காலத்துக்கு முன்பே ஓட்டப்பிடாரம் தொகுதிக்குள்பட்ட தூத்துக்குடி முத்தம்மாள் காலனி, சோரீஸ்புரம் ஆகிய தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் தேங்காதவாறு நிரந்தரத் தீா்வு காணப்படும். படித்த இளைஞா், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் தனித்திறன்களை மேம்படுத்த திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

தருவைகுளம், வெள்ளப்பட்டி கடற்கரைக் கிராமங்களை இணைத்து புதிய சுற்றுலாத் தலம் ஏற்படுத்தப்படும். தருவைகுளத்தில் மீனவா்களின் வேலைவாய்ப்பைப் பெருக்க புதிதாக படகு கட்டும் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com