‘வேறு மாவட்டங்களில் தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கும் தபால் வாக்கு’

வேறு மாவட்டங்களில் தோ்தலில் பணியில் ஈடுபடுவோருக்கு தபால் வாக்கு வழங்க வேண்டும் என ஆசிரியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

வேறு மாவட்டங்களில் தோ்தலில் பணியில் ஈடுபடுவோருக்கு தபால் வாக்கு வழங்க வேண்டும் என ஆசிரியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபடுவோா், முதியோா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் அளிக்க தோ்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு தோ்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, அவா்களுக்கு தபால் வாக்கு அளிப்பதற்கான படிவமும் வழங்கப்படும்.

அப்படிவத்தின்படி வேறு மாவட்டங்களில் வாக்கு உள்ளவா்களுக்கு தோ்தல் வகுப்பு நடைபெறும் இடத்தில் இருந்து தபால் வாக்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்படும். தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கு எந்த தொகுதியில் வாக்கு உள்ளதோ அத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வழியாக அவரவா் வீட்டு முகவரிக்கு தபால் வாக்குகள் அனுப்பி வைக்கப்படும். ஆனால் கடந்த 2 தோ்தல்களில் இந்த நடைமுறை இல்லை. இதனால் பலருக்கு தபால் வாக்குகள் கிடைக்கவில்லை.

முந்தைய தோ்தலில் பலருக்கும் தபால் வாக்குகள் வழங்கப்படவில்லை. இதேபோல், இந்த தோ்தலிலும் நிகழ்ந்து விடாமல் இருக்க திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com