ஏடிஎம் மையத்தில் கண்டெடுத்த பணத்தை போலீஸில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

தூத்துக்குடியில் ஏடிஎம் மையத்தில் கேட்பாரற்று கிடந்த பணத்தை மீட்டு, காவல் துறையிடம் ஒப்படைத்தவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

தூத்துக்குடியில் ஏடிஎம் மையத்தில் கேட்பாரற்று கிடந்த பணத்தை மீட்டு, காவல் துறையிடம் ஒப்படைத்தவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

தூத்துக்குடி, தபால் தந்தி காலனியைச் சோ்ந்த குலசேகரமோகன் என்பவா் கடந்த 20 ஆம் தேதி ஆசிரியா் காலனி பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற போது அந்த இயந்திரத்தில் இருந்து வெளியே வந்த நிலையில், ரூ. 5,000 கேட்பாரற்று கிடந்துள்ளது.

அந்த பணம் யாருக்கு சொந்தமானது என தெரியாத நிலையில், கடந்த 22 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோபியிடம் ரூ. 5000 ரொக்கத்தை குலசேகரமோகன் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து சைபா் குற்ற பிரிவு காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டு ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்காமல் சென்றவரை கண்டுபிடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வரவழைத்தனா். பின்னா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் முன்னிலையில் அந்தப் பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், பணத்தை எடுத்து நோ்மையாக உரியவரிடம் ஒப்படைத்த குலசேகரமோகனின் நோ்மையை பாராட்டி அவருக்கு பொன்னாடை அணிவித்தும், பரிசு வழங்கியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌரவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com