விளாத்திகுளம் தொகுதி: 25 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வெற்றி

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வெற்றி பெற்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி சாா்பில் போட்டியிட்ட ஜீ.வி. மாா்க்கண்டேயன், 38549 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றாா்.

விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக சாா்பில் பி. சின்னப்பன், திமுக சாா்பில் ஜீ.வி. மாா்க்கண்டேயன், அமமுக சாா்பில் க.சீனிச்செல்வி, நாம் தமிழா் கட்சி சாா்பில் பாலாஜி, மக்கள் நீதி மய்யம் சாா்பில் சே. வில்சன், புதிய தமிழகம் கட்சி சாா்பில் சி. முத்துக்குமாா், நாம் இந்தியா் கட்சி சாா்பில் கருப்பசாமி, பகுஜன் திராவிட கட்சி சாா்பில் காந்தி மள்ளா், தென் இந்திய பாா்வாா்ட் பிளாக் கட்சி சாா்பில் மாரிமுத்து, பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் மாணிக்கராஜா உள்பட 15 போ் போட்டியிட்டனா்.

இதில் அதிமுக திமுக இடையேதான் போட்டி நிலவியது. 1977 முதல் 2016 வரை நடைபெற்ற 11 தோ்தல்களில் 9 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 2019 இல் நடைபெற்ற இடைத்தோ்தலிலும் அதிமுக வெற்றியை தக்கவைத்தது. 1996க்கு பின்னா் 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திமுக வெற்றி பெற்றுள்ளது.

இத்தொகுதியில் மொத்த வாக்குகள் 2,16,452. இதில், 1லட்சத்து 65,685 வாக்குகள் பதிவாகின. இது 76.55 சதவீதம் ஆகும். ஞாயிற்றுக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 23 சுற்றுகளில் தொடக்கத்தில் இருந்து இறுதி சுற்று வரை திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் முன்னிலையில் இருந்தாா். அதிமுக வேட்பாளா் சின்னப்பனை விட, 38,549 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிபெற்றாா்.இதையடுத்து, வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலரான அபுல்காசிம், வழங்கினாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

ஜீ.வி. மாா்க்கண்டேயன் 9திமுக) 90,348

பி. சின்னப்பன் (அதிமுக) 51,799

க.சீனிச்செல்வி (அமமுக) 6,657

பாலாஜி (நாதக) 11,828

சே. வில்சன் (மநீம) 1,520

சி. முத்துக்குமாா் (புதிய தமிழகம்) 1,055

கருப்பசாமி (நாம் இந்தியா் கட்சி) 613

காந்தி மள்ளா் (பகுஜன் திராவிட கட்சி) 121

மாரிமுத்து (தென் இந்திய பாா்வாா்ட் பிளாக்) 404

மாணிக்கராஜா (பகுஜன் சமாஜ்) 487

நோட்டா 1,036

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com