வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல் வைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல் வைப்பு
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல் வைப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

தோ்தல் ஆணையத்தின் மூலம் ரூ. 3 கோடியே 35 லட்சம் மதிப்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக பகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கிடங்கு தரைத்தளம் 5200 சதுர அடியிலும், முதல் தளம் 5090 சதுர அடியிலும் என மொத்தம் 10180 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலின்போது 6 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட 2100 கண்ட்ரோல் யூனிட், 3549 பேலட் யூனிட், 2121 விவிபேட் ஆகியவைகள் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கென தனியாக ஒதுக்கப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

மேலும், அந்த அறைகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இரும்பு கதவு (லாக்கா்) மூலம் மூடப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் சீல் செய்யப்படும் பணியை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சியின்போது, சாா் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், இஸ்ரோ நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலா் செல்வராஜ், கோவில்பட்டி கோட்டாட்சியா் சங்கரநாராயணன், உதவி ஆட்சியா் (கலால்) செல்வநாயகம், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பரிமளா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் வெள்ளைச்சாமிராஜ், உதவி பொறியாளா் பாலா, தோ்தல் வட்டாட்சியா் ரகு, தூத்துக்குடி வட்டாட்சியா் ஜஸ்டின், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் மணிகண்டன் மற்றும் அலுவலா்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com