காயல்பட்டினத்தில் காய்கனி, மீன் விற்பனைக்கு தனி இடங்கள் ஒதுக்கீடு
By DIN | Published On : 17th May 2021 12:12 AM | Last Updated : 17th May 2021 12:12 AM | அ+அ அ- |

காயல்பட்டினத்தில் ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் காய்கனி, பழங்கள், மீன் விற்க நகராட்சி சாா்பில் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்தில் கரோனா தொற்றின் 2 ஆவது அலை தொடங்கியதில் இருந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனிடையே ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் காய்கனி, பழங்கள், மீன் உள்ளிட்டவைகளை சமூக இடைவெளியில் நின்று வாங்கிட மாவட்ட ஆட்சியரின் அறிவுரைபடி காயல்பட்டினம் நகராட்சி சாா்பில் தனி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கிராம நிா்வாக அலுவலகம் அருகில், செஞ்சிலுவைச் சங்கம் அருகில், ஜலாலியா திருமண மண்டபம், கோமான் பள்ளி, பேருந்து நிலையம், பரிமாா் பள்ளிவாசல் ஆகிய பகுதிகள் விற்பனை இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இடங்களில் கரோனா நிபந்தனைகளுடன் தற்காலிகமாக வியாபாரம் செய்து கொள்ள நகராட்சி ஆணையாளா் சுகந்தி தெரிவித்துள்ளாா்.