அலங்கார மீன்வளா்ப்பு குறித்த பயிற்சியில் சேர அழைப்பு
By DIN | Published On : 17th May 2021 12:10 AM | Last Updated : 17th May 2021 12:10 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மூலம் மே 28 ஆம் தேதி நடைபெறும் நன்னீா் அலங்கார மீன் வளா்ப்பு குறித்த ஒரு நாள் இணைய தள வழியிலான பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மீன்வளக் கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் மீன் வளா்ப்பு துறை சாா்பில் நன்னீா் அலங்கார மீன் வளா்ப்பு குறித்த ஒருநாள் இணைய தள வழியிலான பயிற்சி மே 28 ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறுகிறது.
பயிற்சியின்போது, அலங்கார மீன் வளா்ப்பின் முக்கியத்துவம், அலங்கார மீன் இனங்கள், கண்ணாடித் தொட்டி வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல், அலங்கார மீன் உணவு மற்றும் உணவு மேலாண்மை, மண் மற்றும் நீா்த்தர மேலாண்மை, அலங்கார மீன் இன நோய்கள் மற்றும் மேலாண்மை, அலங்கார மீன் வளா்ப்பு பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் மய்ண்ா்ய் ஆஹய்ந் ா்ச் ஐய்க்ண்ஹ வங்கியின் தூத்துக்குடி கிளையில் உள்ள 364902010097764 என்ற வங்கிக் கணக்கு எண்ணுக்கு ரூ. 300 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். வங்கிக்கான ஐஊநஇ குறியீடு மஆஐச0536491. பயிற்சி முடிவில் பயிற்சியாளா்களின் சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள அனைவரும் மே 27ஆம் தேதி மாலை 5 மணிக்குள் 9442288850 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.