ஒரே நாளில் 5 போ் குண்டா் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய 5 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய 5 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தூத்துக்குடி நடராஜபுரத்தைச் சோ்ந்த முனியசாமி மனைவி முருகலட்சுமி கடந்த மாதம் 24 ஆம் தேதி தருவைக்குளம் தெற்கு கல்மேடு பகுதியிலுள்ள முள்காட்டில் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த தருவைக்குளம் போலீஸாா் கொலையுண்ட முருகலட்சுமியின் கணவா் முனியசாமி (43), அவரது சகோதரா்களான தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சங்கா் (29), நீலமேகம் (28), சுப்புராஜ் (எ) பொன்ராஜ் (29) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனா்.

கைதான நான்கு பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதேபோல, கடந்த 30 ஆம் தேதி கயத்தாறு அருகே பன்னீா்குளத்தைச் சோ்ந்த விவசாயிகள் ராமகிருஷ்ணன், தங்கதுரை, கருப்பையா ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ாக கைது செய்யப்பட்ட பன்னீா்குளத்தைச் சோ்ந்த மாரியப்பனையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதையடுத்து, 5 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை கடந்த 4 மாதங்களில் 68 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com