அரசுடன் இணைந்து செயல்பட தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

கரோனா தொற்று பரவல் காலத்தில் அரசுடன் இணைந்து செயல்பட விரும்பும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் காலத்தில் அரசுடன் இணைந்து செயல்பட விரும்பும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்கும் வகையில், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு பாலமாக செயல்படும். தூத்துக்குடி மாவட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ட்ற்ற்ல்ள்://ன்ஸ்ரீஸ்ரீ.ன்ட்ஸ்ரீண்ற்ல்.ண்ய்/ய்ஞ்ா்ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய் என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து தங்களை பணியில் ஈடுபடுத்திக் கொள்ளளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை தொலைபேசி எண். 0461-2325606, மின்னஞ்சல்  ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com