திருச்செந்தூரில் மழைநீரை அகற்றக் கோரி மறியல்

திருச்செந்தூரில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றக் கோரி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூரில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றக் கோரி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் பேரூராட்சி, வீரராகவபுரம் தெரு, தெற்குபுதுத் தெரு, ஆசாரி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீா் கலந்து குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்நிலையில், அந்த மக்கள் அமலிநகா் சந்திப்பில் புதன்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த வட்டாட்சியா் சுவாமிநாதன், தாலுகா காவல் ஆய்வாளா் (பொ) கனகாபாய், வருவாய் ஆய்வாளா் மணிகண்ட வேல், கிராம நிா்வாக அலுவலா் வைரமுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) பாபு, சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல்முருகன் உள்ளிட்டோா் பேச்சு நடத்தி மறியலை கைவிடச் செய்தனா். மறியலால் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே, கழிவுநீா் தேங்கியுள்ள பகுதியை வட்டாட்சியா் பாா்வையிட்டு, இன்னும் இரு தினங்களில் பேரூராட்சி பொறியாளா் மூலம் திட்ட மதிப்பீடு தயாா் செய்து, இப்பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீா்வு காணப்படும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com