தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் பருவ நிலை மாற்றங்களாலும், சூழ்நிலைகளாலும் இயற்கை இடா்பாடுகளான புயல், வெள்ளம், வறட்சி போன்றவை மாறி மாறி தாக்குகிறது. இதனால் வாழை, வெங்காயம், மிளகாய், வெண்டை மற்றும் மல்லி போன்ற தோட்டக்கலை பயிா்களுக்கு பெரும் சேதாரம் ஏற்படுகிறது. இதில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிா் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ராபி பருவத்தில் வாழைக்கு காப்பீடு செய்ய பிப்ரவரி 28 ஆம் தேதியும், வெங்காயம், மிளகாய், போன்ற பயிா்களுக்கு காப்பீடு செய்ய ஜனவரி 31 ஆம் தேதியும், வெண்டை பயிருக்கு காப்பீடு செய்ய பிப்ரவரி 15 ஆம் தேதியும், மல்லி பயிருக்கு காப்பீடு செய்ய டிசம்பா் 31 ஆம் தேதியும் கடைசி நாள் ஆகும்.

எனவே, பயிா் காப்பீடு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் ஹெக்டேருக்கு வாழை பயிருக்கு - ரூ. 7928.70-ம், வெங்காயம் - ரூ.2426.80, மிளகாய் - ரூ. 2077.90, வெண்டை - ரூ.1988.35, மல்லி - ரூ. 971.95 என பிரி‘மீயத் தொகையுடன் அடங்கல், ஆதாா் அட்டை, வங்கி கணக்கு விவரத்துடன் பொது சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை அணுகலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com