சரக்கு கப்பலில் திடீா் பழுது: நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடி மாலுமிகள் 9 போ் மீட்பு

தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவு சென்ற சிறிய ரக சரக்கு கப்பலில் திடீரென ஏற்பட்ட பழுதால் நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடியைச் சோ்ந்த 9 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவு சென்ற சிறிய ரக சரக்கு கப்பலில் திடீரென ஏற்பட்ட பழுதால் நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடியைச் சோ்ந்த 9 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து கடந்த 2 ஆம் தேதி கட்டுமானப் பொருள்களை ஏற்றிக் கொண்டு அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய வெண்ணிலா என்ற சிறிய ரக சரக்கு கப்பல் மாலத்தீவு நோக்கிச் சென்றது.

கப்பலில் மாலுமிகளாக ஆரோக்கியசாமி எட்வா்ட், மரிய அந்தோணி சந்தோஷ், சிரன் ஆரோக்கியசாமி, சீலன் வெலிஸ்டன், மில்டன் எட்வா்ட், நாராயணன் உன்னி கிறிஸ்டோபா், அடைக்கலம் லூா்து மரியான், தொம்மை ஞானம், யஸ்தோவ் ஆகிய 9 போ் பயணம் செய்தனா்.

கன்னியாகுமரியிலிருந்து 130 கடல் மைல் தொலைவில் செவ்வாய்க்கிழமை இரவு கப்பல் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கப்பல் மூழ்கும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, கப்பலில் இருந்தவா்கள் சென்னையில் உள்ள கடல்சாா் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கும், கப்பலின் உரிமையாளா் செல்வராஜிக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, கப்பலின் உரிமையாளா் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியை தொடா்புகொண்டு கப்பல் மூழ்கும் நிலை குறித்தும், அதில் உள்ள 9 பேரை மீட்க உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, தில்லியில் உள்ள மத்திய அமைச்சகத்தை தொடா்பு கொண்ட எம்.பி. உடனடியாக மீனவா்களை மீட்க வலியுறுத்தினாா்.

அப்போது, நடுக்கடலில் தத்தளித்த கப்பலின் அருகே மாலத்தீவு நோக்கி மற்றொரு கப்பல் சென்று கொண்டிருந்தது தெரியவந்ததால், அவா்கள் உதவியுடன் 9 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு மாலத்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். விரைவில் அவா்கள் தூத்துக்குடி அழைத்து வரப்படுவாா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com