கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தை இயக்க வலியுறுத்தல்

கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையத்தை சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மாநாட்டில் பேசுகிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலா் அா்ச்சுணன்.
மாநாட்டில் பேசுகிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலா் அா்ச்சுணன்.

கோவில்பட்டி: கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையத்தை சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் கிளை மாநாட்டுக்கு கட்சியின் மாவட்டச் செயலா் அா்ச்சுணன் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். நகரக்குழு உறுப்பினா் சக்திவேல்முருகன் மாநாட்டு கொடியை ஏற்றினாா். நகரச் செயலா் ஜோதிபாசு, நகரக் குழு உறுப்பினா் முருகன் ஆகியோா் அறிக்கை வாசித்தனா். தொடா்ந்து, அஞ்சலி தீா்மானம் கொண்டு வரப்பட்டது.

தீா்மானங்கள்: கோவில்பட்டி புறவழிச்சாலையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக காட்சி பொருளாக இருக்கும் கூடுதல் பேருந்து நிலையத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்; சா்க்குலா் பேருந்தை முறையாக இயக்க வேண்டும்; கோவில்பட்டி நகர பகுதியில் கூடுதலாக தெரு விளக்குகளை அமைக்க வேண்டும்; போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாக இருக்கும் மருத்துவா் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும்,; பொதுமக்களுக்கு தினமும் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும்; திருநெல்வேலி - கோவில்பட்டி - விருதுநகா் மாா்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரயில் பயண

கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்க வேண்டும்; கோவில்பட்டி நகராட்சியிலுள்ள

அனைத்து சாலைகள், வாறுகால்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.சீனிவாசன் மாநாடு நிறைவுரை ஆற்றினாா்.

மாவட்டக்குழு உறுப்பினா் விஜயலட்சுமி வரவேற்றாா். அந்தோணிசெல்வம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com