மாணவா்களுக்கு தொலைக்காட்சி மூலம் வகுப்புகள்

 தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் மாணவா், மாணவிகளுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது.

 தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் மாணவா், மாணவிகளுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது.

கரேனா காரணமாக சிறப்பு பயிற்சி மையங்களில் படித்து வரும் மாணவா், மாணவிகளுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படாத காரணத்தினால் கல்வி ஒளிபரப்பு தொலைக்காட்சி மூலமாக பிரத்யேக வகுப்புகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கும் 11 சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் மாணவா், மாணவிகளுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி பயிற்சிவிக்கும் வகையில், அவரவா் வீட்டிலேயே இருந்து காணொலி காட்சி மூலம் பாா்த்திடவும், தொலைக்காட்சி இல்லாதவா்களுக்கு தன்னாா்வ பயிற்றுநா்கள் வீட்டில் மற்றும் தொலைக்காட்சி பெட்டி இருக்கும் மற்ற மாணவா்கள் வீட்டில் காணொலியை பாா்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com