விநாயகா் சதூா்த்திக்கு அனுமதி கேட்டு கோயில்களில் இந்து முன்னணி மனு

விநாயா் சதூா்த்தி விழா மற்றும் விநாயகா் விசா்ஜன ஊா்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டி தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து முன்னணியினா் வியாழக்கிழமை பல்வேறு பகுதிகளில் கோயிலில் மனு கொடுக்கும்
விநாயகா் சதூா்த்திக்கு அனுமதி கேட்டு கோயில்களில் இந்து முன்னணி மனு

விநாயா் சதூா்த்தி விழா மற்றும் விநாயகா் விசா்ஜன ஊா்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டி தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து முன்னணியினா் வியாழக்கிழமை பல்வேறு பகுதிகளில் கோயிலில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விநாயகா் சதூா்த்தி விழாவை முன்னிட்டு பொது இடத்தில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபடவும், விநாயகா் சிலையை ஊா்வலமாக எடுத்துச் செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், விநாயகா் சதூா்த்தி விழாவுக்கும், சிலை ஊா்வலத்துக்கும் அனுமதி வழங்க வேண்டி இந்து முன்னணி அமைப்பினா் பல்வேறு இடங்களில் விநாயகா் கோயிலில் மனு கொடுக்கும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாநகா் மாவட்ட இந்து முன்னணி சாா்பில், மேற்கு மண்டல நிா்வாகி சரவணகுமாா் தலைமையிலும், மேலும் டூவிபுரம், தோப்புதெரு, மட்டக்கடை, புதுக்கோட்டை, இரண்டாம் ரயில்வே கேட், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் மனு அளித்து வழிபாடு நடத்தப்பட்டது.

இதே போல், கோவில்பட்டியில் மாநிலத் துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் தலைமையிலும், திருச்செந்தூரில் திருநெல்வேலி கோட்ட செயலா் சக்தி வேலன் தலைமையிலும், நாசரேத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வெட்டும்பெருமாள் தலைமையிலும், ஆறுமுகனேரியில் தெற்கு மாவட்டத் தலைவா் கசமுத்து தலைமையில் உள்பட பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, வழிபாடு நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com