தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள்

கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில், தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிட்டோா்.
ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிட்டோா்.

கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில், தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன் தலைமையில், திமுக பொதுக்குழு உறுப்பினா் என்.ஆா்.கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட வழக்குரைஞரணி துணை அமைப்பாளா் ராமச்சந்திரன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில், மாவட்டச் செயலா் கதிரேசன் தலைமையில், இமானுவேல் சேகரன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சமத்துவ மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலா் பாஸ்கரன் தலைமையில், திட்டங்குளத்தில் உள்ள இமானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆறுமுகனேரி: ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளா் கூட்டமைப்பு மாநில பொருளாளா் பா.ராஜேந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com