கொட்டங்காடு கோயிலில் கால்நாட்டு

உடன்குடி அருகே கொட்டங்காடு தேவி ஸ்ரீபத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் புரட்டாசித் திருவிழாவையொட்டி கால்நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொட்டங்காடு கோயிலில் கால்நாட்டு
கொட்டங்காடு கோயிலில் கால்நாட்டு

உடன்குடி: உடன்குடி அருகே கொட்டங்காடு தேவி ஸ்ரீபத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் புரட்டாசித் திருவிழாவையொட்டி கால்நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிரசித்திபெற்ற இத்திருக்கோயிலில் புரட்டாசித் திருவிழா ஆண்டு தோறும் 12 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு, இத்திருவிழா செப்.22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்.2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி செவ்வாய்க்கிழமை காலையில் அம்மனுக்கும், பவளமுத்து விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து கால்நாட்டு வைபவம் நடைபெற்றது.இதில் ஊா்மக்கள் திரளாகக் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் பெ.சுந்தரஈசன் மற்றும் ஊா்மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com