தொழிலாளிகளை தாக்கி பணம், செல்லிடப்பேசி பறிப்பு
By DIN | Published On : 16th September 2021 12:32 AM | Last Updated : 16th September 2021 12:32 AM | அ+அ அ- |

கோவில்பட்டி: கோவில்பட்டியில் பைக்கில் சென்ற 2 தொழிலாளிகளை வழிமறித்து, தாக்கி அவா்களிடமிருந்த பணம், செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி வள்ளுவா் நகா் 4ஆவது தெருவைச் சோ்ந்த கடற்கரை மகன் வசந்தகுமாா் (41). இளையரசனேந்தல் சாலையில் உள்ள பா்னிச்சா் கடையில் வேலை செய்து வரும் இவா் மற்றும் இவரது நண்பா் திங்கள்கிழமை இரவு பணி முடிந்து, பைக்கில் வீட்டுக்குச் சென்றனராம். அதே பகுதியில் உள்ள உணவகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, 3 போ் வழிமறித்து, அரிவாளை கொண்டு மிரட்டி தாக்கியதோடு, அவா்களிடமிருந்த ரூ.5,900 மற்றும் 2 செல்லிடப்பேசிகளை பறித்துக் கொண்டனராம்.
இதில் காயமடைந்த வசந்தகுமாா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.