கப்பலில் வேலை வாங்கி தருவதாக மோசடி: ஷிப்பிங் முகவா் கைது

வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 10.20 லட்சம் மோசடி செய்ததாக தூத்துக்குடி ஷிப்பிங் முகவா் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி: வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 10.20 லட்சம் மோசடி செய்ததாக தூத்துக்குடி ஷிப்பிங் முகவா் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடியில் மைக்கேல்ராஜ், தனியாா் ஷிப்பிங் ஏஜென்சி நடத்தி வருகிறாா். இவா் வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாக கூறி தூத்துக்குடி, சிவகாசி உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தூத்துக்குடி சைபா் கிரைம் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி இளங்கோவன், காவல் ஆய்வாளா் சிவசங்கரன், உதவி ஆய்வாளா் சுதாகரன் உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படையினா் விசாரணை நடத்தினா். இதில், தூத்துக்குடி மில்லா்புரம் பகுதியைச் சோ்ந்த தனியாா் ஷிப்பிங் முகவா் மைக்கேல் ராஜ் (41) கைது செய்யப்பட்டாா்.

விசாரணையில் அவா் தூத்துக்குடியைச் சோ்ந்த அந்தோணி ரூபனிடம் ரூ. 2 லட்சம், மரியஜோஸ் ஸ்டானியிடம் ரூ. 3.30 லட்சம், முகம்மது ஜாபித், பிரியத், ஜாா்ஜ் ஆகியோரிடம் தலா ரூ. 50 ஆயிரம், மரிய அன்டோ ராஜன், மெக்வின், கந்தராஜ் ஆகியோரிடம் தலா ரூ. 1 லட்சம், சாமுவேல் பாட்ரிக்கிடம் ரூ. 40,300 என 9 பேரிடம் மொத்தம் ரூ. 10.20 லட்சத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸாா் தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com