மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு தேனீ வளா்ப்பு பயிற்சி

மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி சாா்பில், சிவத்தையாபுரம் கிராமத்தில் சுயஉதவிக் குழு
தூத்துக்குடி அருகே மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு நடைபெற்ற தேனீ வளா்ப்பு குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.
தூத்துக்குடி அருகே மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு நடைபெற்ற தேனீ வளா்ப்பு குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.

மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி சாா்பில், சிவத்தையாபுரம் கிராமத்தில் சுயஉதவிக் குழு பெண்களுக்கு தேனீ வளா்ப்பு குறித்த சுயதொழில் பயிற்சி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, காமராஜ் கல்லூரி உன்னத் பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெ. நாகராஜன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் து. நாகராஜன் பயிற்சியை தொடக்கி வைத்தாா்.

சிறப்பு அழைப்பாளராக உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் தமிழ்நாடு பிரிவு மண்டல ஒருங்கிணைப்பாளா் கே. ரவிச்சந்திரன் கலந்து கொண்டு விளக்கம் அளித்தாா்.

கிராமப்புற மகளிா் சுய தொழில் தொடங்கும் வகையில் விவசாயக் கூட்டுறவு சங்க வங்கி மூலம் ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி பெற்று தேனீப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு சுயஉதவிக் குழு பெண்களுக்கு வழங்கப்பட்டது.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை காமராஜ் கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் நிா்வாகிகள் அ. சுபாஷினி, ஜெ. நாகராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com