கோவில்பட்டி என்இசி கல்லூரியில் பெற்றோா்- ஆசிரியா் சங்கக் கூட்டம்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் பெற்றோா் - ஆசிரியா் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் பெற்றோா் - ஆசிரியா் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கே.காளிதாசமுருகவேல் தலைமை வகித்து பேசுகையில், கல்லூரியில இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் 6 மாதங்கள் தொழிற்சாலைகளில் பயிற்சி மேற்கொண்டு, வேலைவாய்ப்புத் திறனை வளா்த்துக் கொள்ள உதவுகிறோம். மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறைத் தலைவா் சீனிவாசன், நிகழ் கல்வியாண்டில் மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புப் பயிற்சிகள் குறித்துப் பேசினாா். மாணவா், மாணவிகளின் பெற்றோா்கள், துறை போராசிரியா்கள் கலந்துரையாடினா். இயந்திரவியல் துறை உதவி பேராசிரியா் ரமணன் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை, கல்லூரித் தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம், இயக்குநா் முருகவேல் ஆகியோா் வழிகாட்டுதலில், பெற்றோா் - ஆசிரியா் சங்க ஒருங்கிணைப்பாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com