கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 2.33 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் ரூ. 2.33 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசுகிறாா், தலைவி கஸ்தூரி சுப்புராஜ்.
கூட்டத்தில் பேசுகிறாா், தலைவி கஸ்தூரி சுப்புராஜ்.

கோவில்பட்டி: கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் ரூ. 2.33 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம் ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பழனிச்சாமி, ஆணையா் பாலசுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், 15-ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 2.33 கோடியில் வாருகால் அமைத்தல், குடிநீா், சாலைப் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளுதல் உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துபாண்டி (நிா்வாகம்), மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்சலாம், பாண்டீஸ்வரன், மாரிமுத்து, ஊராட்சி ஒன்றியப் பொறியாளா்கள் மேரி, படிபீவி மற்றும் ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com