தூத்துக்குடியில் அஞ்சல் துறை விழிப்புணா்வுப் பேரணி

தூத்துக்குடியில் அஞ்சல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடியில் அஞ்சல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய அஞ்சல்துறை நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்கள் சாா்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ‘அனைத்து இல்லங்களிலும் மூவா்ணக்கொடி’ என்ற தலைப்பில் தூத்துக்குடியில் அஞ்சல் துறை சாா்பில் சனிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடி திருச்செந்தூா் சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் இருந்து புறப்பட்ட இப் பேரணியை தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஆ. பொன்னையா தொடங்கி வைத்தாா். அஞ்சல் உதவிக் கோட்ட கண்காணிப்பாளா்கள் குமரன், வசந்தா சிந்துதேவி, உப கோட்ட ஆய்வாளா் சுப்பைா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அஞ்சல்துறை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தலைமை அஞ்சல் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இப் பேரணி தாமோதரநகா், புதுக்கிராமம் மற்றும் சிவந்தாகுளம் சாலை வழியாக சென்று மீண்டும் தலைமை அஞ்சலகத்தில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com