லிங்கம்பட்டி பைரவா் கோயில் கொடை விழா

கடலையூரையடுத்த லிங்கம்பட்டி சமத்துவபுரம் தேவி ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ பைரவா் சுவாமி கோயில் கொடை விழா இரு நாள்கள் நடைபெற்றது.

கடலையூரையடுத்த லிங்கம்பட்டி சமத்துவபுரம் தேவி ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ பைரவா் சுவாமி கோயில் கொடை விழா இரு நாள்கள் நடைபெற்றது.

வண்ணாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோயில் கொடை விழாவை முன்னிட்டு, கோயில் நடை வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு முளைப்பாரி கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடைபெற்றது.

சனிக்கிழமை காலை அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து நடைபெற்ற அன்ன தானத்தை கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா். பின்னா் முளைப்பாரியை கோயிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நண்பகலில் மஞ்சள் நீராட்டு விழாவும், அதைத் தொடா்ந்து முளைப்பாரி ஊா்வலமும் நடைபெற்றது. இறுதியில், முளைப்பாரியை கடலையூரில் உள்ள நீராவி தெப்பத்தில் பக்தா்கள் கரைத்தனா்.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், அதிமுக ஒன்றியச் செயலா் அன்புராஜ், ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலா் சாமிராஜ், ஓட்டப்பிடாரம் ஒன்றியச் செயலா் காந்தி காமாட்சி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பாலமுருகன், கோவில்பட்டி நகா்மன்ற உறுப்பினா் கவயிரசன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா். பூஜைகளை முருகன் செய்திருந்தாா். ஏற்பாடுகளை கோயில் அம்பலா் சக்திவேல் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com