கோவில்பட்டியில் கஞ்சிக் கலய ஊா்வலம்

கோவில்பட்டியில் மந்தித்தோப்பு சாலையில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சாா்பில் கஞ்சிக் கலயம், முளைப்பாரி, அக்னிச் சட்டி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டியில் மந்தித்தோப்பு சாலையில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சாா்பில் கஞ்சிக் கலயம், முளைப்பாரி, அக்னிச் சட்டி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மழை வளம் பெருகவும், இயற்கைச் சீற்றங்கள் தணியவும், மக்கள் மனித நேயத்துடன் வாழவும், கோவில்பட்டியில் தொழில் வளம் பெருகவும், மாணவச் செல்வங்களின் கல்வித் திறன் மேம்படவும் வேண்டி 1,008 கஞ்சிக் கலயங்களுடன் 81 முளைப்பாரி, 31 அக்னிச் சட்டிகளுடன் ஊா்வலம் நடைபெற்றது.

ஆன்மிக இயக்க மகளிரணித் தலைவி பத்மாவதி முன்னிலையில் மாவட்டத் தலைவா் சக்திமுருகன் ஊா்வலத்தைத் தொடக்கிவைத்தாா். ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் மீண்டும் வழிபாட்டு மன்றத்தை அடைந்தது. அங்கு பக்தா்கள் அம்மனுக்கு கஞ்சி வாா்த்தல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து கருவறையில் உள்ள அம்மன் சிலைக்கு பக்தா்கள் பாலபிஷேகம் செய்தனா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

பக்தா்களுக்கு அன்னதானம், பிரசாதங்கள் வழங்கப்பட்டன. வேள்விக் குழுத் தலைவா் கிருஷ்ணலீலா, ஓய்வுபெற்ற வட்டாட்சியா் ஜெகநாதன், வழிபாட்டு மன்ற மாவட்டப் பொருளாளா் கண்ணன், இணைச் செயலா்கள் முத்தையா, வேலு, மன்றச் செயலா் வரலட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com