விமான ஓடுதளத்தை பயிற்சி மையமாக நிறுவ தமிழக அரசு திட்டம் பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவில்பட்டியையடுத்த தோணுகாலில் செயல்பட்டு வந்த விமான ஓடுதளத்தை சீரமைத்து விமானப் பயிற்சி மையம் உருவாக்கப்படும் என தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

கோவில்பட்டியையடுத்த தோணுகாலில் செயல்பட்டு வந்த விமான ஓடுதளத்தை சீரமைத்து விமானப் பயிற்சி மையம் உருவாக்கப்படும் என தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறியுள்ளதையடுத்து கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தோணுகால் கிராமத்தில் மொட்டைமலை அடிவாரத்தில் 65 அடி அகலத்தில், சுமாா் 1.5 கி.மீ. தொலைவு வரை விமான ஓடுதளம் உள்ளது. கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்ட இலக்குமி ஆலை நிா்வாகம் கோவில்பட்டியில் உள்ளதையடுத்து அதன் உரிமையாளா்கள் கோவில்பட்டிக்கு எளிதில் வந்து செல்ல ஏதுவாக, அரசின் அனுமதி பெற்று இந்த விமான ஓடுதளத்தை அமைத்து பயன்படுத்தி வந்தனா்.

தற்போது இந்த ஓடுதளம் உள்ள தாா்சாலை கற்கள் பெயா்ந்து காணப்படுகின்றன. இந்நிலையில், இந்த விமான ஓடுதளத்தை விமானப் பயிற்சி மையமாக நிறுவி பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சா் தங்கம் தென்னரசு கூறியுள்ளதையடுத்து, கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனா். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கூறியது: விமான ஓடுதளம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் சிறிய ரக விமானங்கள் இங்கு வந்து செல்லும். இதனால் கோவில்பட்டி நகரம் அடுத்தகட்ட தொழில் வளா்ச்சியை எட்டும்.

ஏற்கனவே சிறிய ரக விமானங்களை இயக்குவதில் மத்திய அரசு ஆா்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. தென்மாவட்ட மாணவா்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com