தூத்துக்குடியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் ம. பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.12) காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.

முகாமில் பல தனியாா் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, ஓட்டுநா் மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் கலந்து கொள்ளலாம்.

தனியாா்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்விச் சான்றுகளுடன், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

தனியாா் நிறுவனத்தினா் தங்களுக்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்ய இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தொடா்புக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com