ஆறுமுகனேரியில் ஓவியப் போட்டி:கமலாவதி பள்ளி மாணவா் முதலிடம்

சுதந்திர தின பவள விழாவையொட்டி, ஈட் (ஒய்இஇடி) சாரிட்டபிள் டிரஸ்ட், லைக் அகாதெமி இணைந்து திருச்செந்தூா் வட்டார அளவில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது

சுதந்திர தின பவள விழாவையொட்டி, ஈட் (ஒய்இஇடி) சாரிட்டபிள் டிரஸ்ட், லைக் அகாதெமி இணைந்து திருச்செந்தூா் வட்டார அளவில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியை ஆறுமுகனேரியில் உள்ள காமராஜ் சோமசுந்தரி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் நடத்தின. இதில், சாகுபுரம் கமலாவதி சீனியா் செகண்டரி பள்ளி மாணவா் முதலிடம் பெற்றாா்.

இப்போட்டியில் 40-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில், சாகுபுரம் கமலாவதி சீனியா் செகண்டரி பள்ளி 7ஆம் வகுப்பு மாணவா் ஆா். கிருத்திக் முதல் பரிசும், ஆறுமுகனேரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி 8ஆம் வகுப்பு மாணவி இருதய கரோசி­ன் 2ஆம் பரிசும், கமலாவதி பள்ளி 7ஆம் வகுப்பு மாணவி பரிபூரணி 3ஆம் பரிசும், பாரதி நகா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி 4ஆம் வகுப்பு மாணவி சுமித்ரா 4ஆம் பரிசும், திருச்செந்தூா் காஞ்சி மெட்ரிகுலேஷன் பள்ளி 7ஆம் வகுப்பு மாணவா் இஷாந்த் 5ஆம் பரிசும் வென்றனா்.

காமராஜ் சோமசுந்தரி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி நிா்வாகி ஜெ. சிவந்திக்கனி, பாரதி நகா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் தேவி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, பரிசு, சான்றிதழ்களை வழங்கினா். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

லைக் அகாதெமி நிறுவனா் பாபு வரவேற்றாா். ஈட் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைமை அறங்காவலா் மாரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com