தேசப் பாதுகாப்புக்கு எதிரான சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை தொடரும்: மத்திய இணை அமைச்சா் எல். முருகன்

தேசப் பாதுகாப்புக்கு எதிரான சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை தொடரும் என்றாா் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன் வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன்.

தேசப் பாதுகாப்புக்கு எதிரான சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை தொடரும் என்றாா் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன் வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன்.

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: கருத்து சுதந்திரத்துக்கு ஓா் எல்லை உண்டு. அரசுக்கு எதிராக, ராணுவத்துக்கு எதிராக, தேசப் பாதுகாப்புக்கு எதிராக ஏதாவது நிறுவனம் செயல்பட்டால் அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தேசப் பாதுகாப்புக்கு எதிரான கருத்துகளைக் கூறிய 10 யூடியூப் சேனல்கள் மீது அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக நூற்றுக்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து தேசத்திற்கு எதிராக கருத்துகளை வெளியிடும் எந்த யூடியூப் சேனலாக இருந்தாலும் சமூக ஊடகமாக இருந்தாலும் அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜகவின் தூத்துக்குடி மாவட்ட தலைவா் சித்ராங்கதன் தலைமையில் மத்திய இணை அமைச்சா் எல். முருகனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com