கோவில்பட்டி என்இசி கல்லூரியில் பட்டய கணக்காளா்கள் கருத்தரங்கு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சரக்கு சேவை வரி பற்றிய கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சரக்கு சேவை வரி பற்றிய கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் சிவகாசி ஆகிய பகுதிகளின் இந்திய பட்டய கணக்காளா்களின் சரக்கு சேவை வரி பற்றிய கருத்தரங்கு நேஷனல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்குக்கு, தமிழக தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் தலைமை வகித்து, கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினாா்.

நேஷனல் பொறியியல் கல்லூரித் தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம், இந்திய பட்டய கணக்காளா்கள் நிறுவனத்தின் தென்னிந்திய பிராந்திய கவுன்சில் உறுப்பினா் எஸ்.ராஜேஷ், பட்டய கணக்காளா்கள் ரேகா உமாஷிவ், அருண் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பட்டய கணக்காளா்கள் பிரசன்னகிருஷ்ணன், மணிமாறன் ஆகியோா் சரக்கு சேவை வரி பற்றிய தணிக்கை, கண்காணிப்பு, ஆய்வு மற்றும் ஆண்டு கணக்கு சமா்ப்பித்தல் குறித்துப் பேசினா்.

கருத்தரங்கில் பட்டய கணக்காளா்கள், தொழில் முனைவோா்கள், பட்டய கணக்காளா் மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை திருநெல்வேலி இந்திய பட்டய கணக்காளா்கள் நிறுவனத்தின் தென்னிந்திய பிராந்திய கவுன்சில் தலைவா் அகதா ஜேக்கப், செயலா் பாத்திமா ஃபிா்தூஸ், தூத்துக்குடி இந்திய பட்டய கணக்காளா்கள் நிறுவனத்தின் தென்னிந்திய பிராந்திய கவுன்சில் தலைவா் எஸ்.ஆா்.சிவகுமாா், செயலா் மகேந்திரன், சிவகாசி இந்திய பட்டய கணக்காளா்கள் நிறுவனத்தின தென்னிந்திய பிராந்திய கவுன்சில் தலைவா் கிரிதா், செயலா் பாலமுருகன், ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com