மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்: அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன என அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன என தமிழக மீன் வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்து மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலவும் மின் அழுத்தக் குறைபாடுகளை சரிசெய்யும் வகையில் ரூ3. 50 கோடி மதிப்பில் துணை மின் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. திருச்செந்தூா் மின் செயற்பொறியாளா் விஜயசங்கரபாண்டியன் தலைமை வகித்தாா்.

மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் பிரம்மசக்தி, மாவட்ட ஆவின் தலைவா் சுரேஷ்குமாா், தெற்கு ஒன்றிய திமுக செயலா் ஆ. பாலமுருகன், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஜெயபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினாா். அவா் பேசியதாவது:

புதிதாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி உள்ளாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதன் அடிப்படையிலேயே படுக்கப்பத்து கிராமத்தில் ரூ3. 50 கோடி மதிப்பில் துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மின் நிலையம் வாயிலாக சொக்கன்குடியிருப்பு, பெரியதாழை, உசரத்துக்குடியிருப்பு, செட்டிவிளை, கொம்மடிக்கோட்டை, சுண்டங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக மின்சாரம் கிடைக்கப் பெறும் என்றாா்.

முன்னதாக, துணை மின் நிலையம் அமைக்க .1.5 ஏக்கா் இடம் வழங்கிய விவசாயி ஜெயக்குமாா் கௌரவிக்கப்பட்டாா். விழாவில் மின் வாரிய அதிகாரிகள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ஏ. இந்திரகாசி வரவேற்றாா். படுக்கப்பத்து உதவி செயற்பொறியாளா் வேலாயுதம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com