சாகுபுரத்தில் பொது மருத்துவ பரிசோதனை முகாம்

சாகுபுரத்தில் பொது மருத்துவ பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

சாகுபுரத்தில் பொது மருத்துவ பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம், அரிமா சங்கம் மற்றும் ஆன்மா சேவை அமைப்பும் திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையுடன் இணைந்து சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன வளாகத்தில் இலவச பொது மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தின.

ஷிபா மருத்துவமனை மருத்துவா் அகமது யூசுப் தலைமையில் 30 மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் பரிசோதனை மேற்கொண்டனா்.

முகாமில், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இசிஜி, எக்கோ, பிஎப்டி, கண் மற்றும் பல் மருத்துவ பரிசோதனைகள் செய்தனா்.

முகாமை டிசிடபிள்யூ நிறுவன மூத்த செயல் உதவித் தலைவா்(பணியகம்) கோ.சீனிவாசன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா்.

முகாமில் உதவித்தலைவா் (உற்பத்தி) சுரேஷ், மூத்த பொதுமேலாளா்கள், பொது மேலாளா்கள், துணைப் பொது மேலாளா்கள், அலுவலா்கள், பணியாளா்கள், தொழிலாளா்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரிமா மற்றும் ஆன்மா உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

முகாமில், 150 போ் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com