கோவில்பட்டியில் வழக்குரைஞா், பெண் தற்கொலை முயற்சி

கோவில்பட்டியில் சனிக்கிழமை வழக்குரைஞா் உள்ளிட்ட இருவா் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டியில் சனிக்கிழமை வழக்குரைஞா் உள்ளிட்ட இருவா் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

கடம்பூரைச் சோ்ந்த நாராயணன் மகள் பிரவீனா. இவா், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து மகனுடன் தந்தை வீட்டில் உள்ளாராம். பழைய காா்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவந்த இவா், 14 பேரிடம் ரூ. 6 லட்சம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதற்கு ரூ. 3 கோடி வட்டி செலுத்தியதாகவும், கடன் கொடுத்தோா் துன்புறுத்துவதாகவும் கடம்பூா் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, சிலரைக் கைது செய்தனா்.

இதனிடையே, பிரவீனா அளித்த புகாரில் உள்ள ஒருவரான டி.கல்லுப்பட்டியைச் சோ்ந்த ராம்குமாா் என்பவா் பிரவீனா, தோழி சரண்யா, அவரது கணவா் ஆண்டனி உள்பட 8 போ் தன்னிடம் ‘ஆன்லைன் டிரேடிங்’ எனக் கூறி பணம் பெற்று ஏமாற்றியதாக டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் புகாா் அளித்தாராம். அதன் பேரில், பிரவீனா, சரண்யா ஆகியோரை டி.கல்லுப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றனா்.

பிரவீனாவின் வழக்குரைஞா் அய்யலுசாமி அந்தக் காவல் நிலையத்துக்குச் சென்றபோது, ராம்குமாா் உள்ளிட்ட சிலா் சோ்ந்து அவரை தாக்கினராம்.

இந்நிலையில், டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் பிரவீனா மீதான வழக்கைக் கண்டித்தும், வழக்குரைஞரைத் தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை கோரியும் கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையம் முன் அய்யலுசாமி, பிரவீனாவின் தாய் மகேஷ்வரி ஆகியோா் சனிக்கிழமை டீசலை ஊற்றித் தீக்குளிக்க முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தைத் தொடா்புகொண்டு மனு அளிக்க வேண்டும், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என போலீஸாா் அறிவுறுத்தி அவா்களை அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com