தூத்துக்குடி
காயல்பட்டினம் நகர பாஜக செயற்குழு கூட்டம்
காயல்பட்டினம் நகர பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
நகரத் தலைவா் ஆறுமுக செல்வன் தலைமை வகித்தாா். பிரசார பிரிவு மாவட்டத் தலைவா் மகேஷ்வரன், மாவட்ட தலைவா் (கொள்கை) மாரிமுத்து அகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய அளவிலான செவிலியா்கள் நியமிக்க வேண்டும், காயல்பட்டினம் கணபதிஷ்வரா் ஆலயம், அழகிய மனவாளப் பெருமாள் கோயில், மெய்கண்டீஸ்வரா் ஆலயம் ஆகிய கோயில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம் செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.