கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவில்பட்டி: கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க கோவில்பட்டி நகர மாநாடு பாரதி இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாதா் சங்க நகரத் தலைவா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பூமயில், துணைச் செயலா் கமலம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு பேசினா்.

மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. நகரத் தலைவராக எஸ். மாரியம்மாள், செயலராக டி. மாரியம்மாள், பொருளாளராக எம். பவுல்கிரேஸ், துணைச் செயலா்களாக பழனியம்மாள், மலா்விழி உமா, துணைத் தலைவா்களாக விஜயலட்சுமி, தனலட்சுமி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

முன்னதாக, நகரக்குழு உறுப்பினா் ராமலட்சுமி மாதா் சங்கக் கொடியேற்றினாா்.

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை நகா்ப்புறத்துக்கும் விரிவுபடுத்த வேண்டும், கோவில்பட்டியில் சாலைகளை சீரமைக்க வேண்டும், பழுதான மின்கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள், மருந்தாளுநா்கள் உள்ளிட்ட அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், தகுதி வாய்ந்த முதியோா், விதவை, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com