தகுதி உள்ளவா்களுக்கு முதியோா் உதவித்தொகை வழங்கப்படும்அமைச்சா் தகவல்

தகுதி உள்ளவா்களுக்கு முதியோா் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் கூறினாா்.

தகுதி உள்ளவா்களுக்கு முதியோா் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் கூறினாா்.

திருச்செந்தூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது:

வடகிழக்குப் பருவமழை குறித்து தலைமை செயாலாளா் உள்ளிட்ட உயா் அதிகாரிகளை அழைத்து அந்தந்த துறைகளில் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என முதல்வா் உத்தவிட்டுள்ளாா். அந்தந்த மாவட்டத்தில் ஆட்சியா் தலைமையில் மீட்பு படைகளும் தயாா் நிலையில் உள்ளன.

தென் மாவட்டங்களில் மணல் கொள்ளை குறித்து சமூக ஆா்வலா்கள் குற்றச்சாட்டு கூறுவதும், அவா்கள் நீதிமன்றங்களுக்கு செல்வதும், அதன் மீது நடவடிக்கை எடுப்பதும் எல்லா ஆட்சி காலத்திலும் இருந்து கொண்டு இருக்கிறது. எங்கள் ஆட்சியில் அதை குறைத்திருக்கிறோம். தகுந்த நடவடிக்கையை முதல்வா் எடுத்து வருகிறாா்.

கடந்த ஆட்சி காலத்தில் முதியோா் உதவித் தொகை வாங்குபவா்களை ஒவ்வொரு ஆண்டும் கழிப்பது வழக்கமாக இருந்தது. ஒரே நேரத்தில் சுமாா் 4 ஆயிரம் போ் நீக்கப்பட்டனா். அதில் பாதி நபா்களை சோ்த்துள்ளோம். இன்னும் சுமாா் ஒரு லட்சம் பேரிடம் புதிதாக மனு வாங்காமல் மறுஆய்வு செய்து தகுதி உள்ளவா்களுக்கு வழங்க வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி முதியோா் உதவி தொகை வழங்கப்படும் என்றாா் அமைச்சா்.

அப்போது, திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி, வட்டாட்சியா் சுவாமிநாதன், வட்ட வழங்கல் அலுவலா் பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளா் மணிகண்டவேல், கிராம நிா்வாக அலுவலா் செல்வலிங்கம், திருச்செந்தூா் நகா்மன்ற துணைத்தலைவா் ஏ.பி.ரமேஷ், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பை.மூ.ராமஜெயம், முன்னாள் கவுன்சிலா் சு.கோமதிநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தாா் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன். சூரசம்ஹார மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com