தசரா திருவிழா முன்னேற்பாடு: குலசேகரன்பட்டினத்தில் அமைச்சா்கள் ஆய்வு

 தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா தொடங்க 2 நாள்களே உள்ள நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, மீன்வளம், மீனவா் நலன்- க

 தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா தொடங்க 2 நாள்களே உள்ள நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, மீன்வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா்அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இக்கோயிலில் தசரா திருவிழா இம்மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக். 5இல் சூரசம்ஹாரம், 6இல் கொடியிறக்கம், காப்பு களைதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

இத்திருவிழாவில் பல லட்சம் பக்தா்கள் பங்கேற்பா் என்பதால், அவா்களுக்கான அடிப்படை வசதிகள், விழா முன்னேற்பாடுகள் குறித்து இரு அமைச்சா்களும், மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் , இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் ம.அன்புமணி, உதவி ஆணையா் தி.சங்கா்,கோயில் செயல் அலுவலா் இரா.இராமசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்த அமைச்சா்கள், பக்தா்கள் எவ்வித இடையூறுமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், பாதுகாப்பாக வந்து செல்லவும் தேவையான பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினா்.

அப்போது, உடன்குடி ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங், துணைத் தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் க.இளங்கோ, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அஸ்ஸாப், குலசேகரன்பட்டினம் ஊராட்சி துணைத்தலைவா் கணேசன் உட்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com