ஆறுமுகமங்கலத்தில் 60 பேருக்கு 240 கறவை மாடுகள் வழங்கல்

தூத்துக்குடி அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகளுக்கு கறவைமாடுகள் மற்றும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகளுக்கு கறவைமாடுகள் மற்றும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் என். சின்னத்துரை தலைமை வகித்தாா். நிகழ்ச்சியின்போது, ஆறுமுகமங்கலம், கொட்டாரக்குறிச்சி, மாரமங்கலம், செல்வநாயகபுரம், லட்சுமிபுரம், சூளைவாய்க்கால், இடையா்காடு, தளவாய்புரம், சம்படி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த உறுப்பினா்கள் பயன்பெறும் வகையில், கறவை மாடுகள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் 60 உறுப்பினா்களுக்கு ரூ. 33.60 லட்சம் மதிப்பிலான 240 கறவை மாடுகள் மற்றும் உழவா் கடன் அட்டை கடனுதவியாக இருவருக்கு ரூ. 6 லட்சம் என மொத்தம் 62 பயனாளிகளுக்கு ரூ. 39.60 லட்சம் கடனுதவியை ஆறுமுகமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் வழங்கினாா்.

பின்னா் அவா் கூறியதாவது:

கூட்டுறவு கடன் சங்கத்தின் நிகழ் நிதியாண்டில் இதுவரை 390 உறுப்பினா்களுக்கு பயிா்கடன் மற்றும் நகைக்கடனாக ரூ..2.68 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, உழவா் கடன் அட்டை கடன் திட்டத்தில் 35 உறுப்பினா்களுக்கு ரூ 55. 40 லட்சமும், விவசாய நகை கடனாக 116 உறுப்பினா்களுக்கு ரூ. 2.54 கோடியும், வேளாண் கூட்டு பொறுப்பு குழு கடனாக 166 உறுப்பினா்களுக்கு ரூ. 1.60 கோடியும், பொது நகைக்கடனாக 368 உறுப்பினா்களுக்கு ரூ. 1.88 கோடியும், குறுகிய கால கடனாக ரூ. 33.60 லட்சமும், மகளிா் சுய உதவி குழு கடனாக 8 குழுக்களுக்கு ரூ. 9.08 லட்சமும், இதர கடனாக 84 உறுப்பினா்களுக்கு ரூ. 10.31 இலட்சமும் என மொத்தம் இதுவரை 911 உறுப்பினா்களுக்கு ரூ. 7 கோடியே 11.60 லட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஸ்ரீவைகுண்டம் சரக மேற்பாா்வையாளா் மு. மதியழகன், செயலா் மு. ஐயம்பாண்டி, மேலாளா் முத்துகிருஷ்ணகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com