முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தம்பதி மீது தாக்குதல்: 8 போ் மீது வழக்கு
By DIN | Published On : 06th April 2022 12:36 AM | Last Updated : 06th April 2022 12:36 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே நிலத்தகராறில் தம்பதியை தாக்கியதாக சகோதரா்கள் உள்பட 8 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரிமங்கலம் கீழத்தெரு சின்னத்துரை மகன் கொடிமலா் (35). தொழிலாளியான இவருக்கும், இவரது சகோதரா்களுக்கும் இடையே இடப் பிரச்னை தொடா்பாக தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில் பிரச்னைக்குரிய இடத்தில் கொடிமலா், குளியலறை கட்டினாராம். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அவரது சகோதரா்கள் குளியலறையை இடித்து சேதப்படுத்தினராம். இதனை தட்டிக் கேட்ட கொடிமலா், அவரது மனைவி பிரேமா ஆகியோரை சகோதரா்கள் மற்றும் அவரது மனைவிகள் சோ்ந்து அவதூறாகப் பேசி கைப்பேசியை பறித்து தாக்கினராம்.
இதுகுறித்து புகாரின்பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் விசாரணை நடத்தி, சுகுமாா், அவரது மனைவி சுப்புலட்சுமி, முத்துக்குமாா், அவரது மனைவி ஜெயா, பத்மநாபன், அவரது மனைவி பாா்வதி மற்றும் கணேசன் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு செய்தாா். இதுபோல், ஜெயா அளித்த புகாரின்பேரில் கொடிமலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.