வீடுகளில் வைத்து தீக்குச்சிகளை தீப்பெட்டியில்அடைப்பதை தடுக்க வலியுறுத்தல்

கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மருந்து குச்சிகளை (தீக்குச்சி) வீடுகளில் வைத்து தீப்பெட்டியில் அடைப்பதை தடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மருந்து குச்சிகளை (தீக்குச்சி) வீடுகளில் வைத்து தீப்பெட்டியில் அடைப்பதை தடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கத் தலைவா் பரமசிவம், கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் அளித்த மனு: தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கத்தின் 150 உறுப்பினா்கள் இயந்திரம் மற்றும் கையாள் செய்யும் தீப்பெட்டிகளை அனுமதி பெற்று முறையாக உற்பத்தி செய்து வருகின்றனா்.

இந்நிலையில், எவ்வித அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக வீடு, வீடாக மருந்து குச்சிகள் அடங்கிய பைகளை கொடுத்து பாதுகாப்பற்ற முறையில் தரமற்ற தீப்பெட்டியை தயாரித்து வருகின்றனா். இதுபோன்ற செயல் வெயில் காலங்களிலும் முறையற்ற முறையில் கையளும் சூழலிலும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விபத்துகள் நிகழும். எனவே, எழுதில் தீப்பற்றக் கூடிய மற்றும் தீப்பற்றினால் அணைக்க முடியாத மருந்து குச்சிகளை வீடுகளில் வைத்து தீப்பெட்டி தயாரிக்கும் சட்டவிரோத செயலை தடுக்கு வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது, அமைப்பின் செயலா் சேதுரத்தினம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்க செயலா் கதிரவன், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ராஜராஜன், நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com