முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
கபடி போட்டி: தூத்துக்குடி அணி வெற்றி
By DIN | Published On : 06th April 2022 12:38 AM | Last Updated : 06th April 2022 12:38 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் அருகே நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றிபெற்ற தூத்துக்குடி மணிராஜ் கபடி கிளப் அணிக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசும், பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது.
திருச்செந்தூா் அருகேயுள்ள நடுநாலுமூலைகிணற்றில் அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான மின்னொளி கபடிபோட்டி 2 நாள்கள் நடைபெற்றது. இதில் 80 அணிகள் கலந்து கொண்டு விளையாடினா். இதில், தூத்துக்குடி மணிராஜ் கபடி கிளப் அணி முதலிடத்தை பிடித்து ரூ.25,001 மற்றும் பரிசு கோப்பையும் பெற்றது.
காயல்பட்டினம் சரவணா சண்முகம் அணி 2ஆவது இடத்தை பிடித்து ரூ. 20,001 மற்றும் பரிசு கோப்பையும் பெற்றது. 3ஆம் இடம் பெற்ற நடுநாலுமூலைகிணறு வவுனியா கபடி கிளப் அணிக்கு ரூ.15,001-ம், 4ஆம் இடம் பெற்ற காயல்பட்டினம் சூப்பா் செவன்ஸ் அணிக்கு ரூ.10,001-ம் மற்றும் பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டது. அதேபோல் 5 முதல் 8-இடம் வரை பெற்ற அணிகளுக்கு தலா ரூ.5,001-ம் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது.
இந்தப் பரிசுத் தொகையையும், பரிசு கோப்பையும் வெற்றி பெற்ற அணிகளுக்கு மேல திருச்செந்தூா் ஊராட்சித் தலைவா் தலைவா் மகாராஜா வழங்கினாா்.
நிகழ்ச்சியில், திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் சிவசுப்பிரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்குரைஞா் பிரிவு மாவட்ட அமைப்பாளா் ரமேஷ், தொழிலதிபா்கள் சிவராஜா, நாகராஜன், நூலகா் ராஜதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் ஸ்ரீ கிருஷ்ணன், நாராயணன், தா்மலிங்கம், சிவபெருமாள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.