திருச்செந்தூரில் மாணவா்களுக்குச் சீருடைகள்

அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய கற்றலின் இனிமை தொடக்கப் பள்ளியில்

அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய கற்றலின் இனிமை தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனின் மகன் ஆா்.ஆனந்த மகேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினாா்.

விசிக ஒன்றியச் செயலா் ஆ.சங்கத்தமிழன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் பாரிவள்ளல், திருச்செந்தூா் தொகுதிச் செயலா் வெற்றிவேந்தன், ஒன்றியப் பொருளாளா் ராசேந்திரன் வளவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருச்செந்தூா் கல்வி மாவட்ட அலுவலா் மோகனன், விசிக முதன்மைச் செயலா் உஞ்சை அரசன் ஆகியோா் அறிமுக உரையாற்றினா். மண்டலச் செயலா் சொ.சு.தமிழினியன், அமைச்சரின் நோ்முக உதவியாளா் கிருபாகரன், அரசு வழக்குரைஞா் சாத்ராக் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் ர.சிவஆனந்தி, துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் செல்வகுமாா், தலைமை ஆசிரியை சிவகாமி, ஒன்றிய திமுக செயலா்கள் சுப்பிரமணியன், நவீன் குமாா், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் சுதாகா், திருச்செந்தூா் நகராட்சி சூரியகலா, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட செயலா் விடுதலை செழியன், விசிக நகரச் செயலா்கள் அம்பேத், வெள்ளைத்துரை, 6-ஆவது வாா்டு பொறுப்பாளா் சரவணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com