தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி

தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.

தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.

இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட 15 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்; இவற்றில் வெற்றி பெறுபவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவா் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தொடா்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு உதவி உபகரணங்களை ஆட்சியா் வழங்கினாா். மேலும், மாவட்ட விளையாட்டு மைதானம் மற்றும் நீச்சல் குளத்தை ஆய்வுசெய்து தேவையான பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்கவும், தொடா்ந்து முறையாக பராமரிக்குமாறு அதிகாரிகளை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியா் சிவசுப்பிரமணியன், செய்தி மக்கள்தொடா்பு அலுவலா் சு. ஜெகவீரபாண்டியன், மாவட்ட விளையாட்டு அலுவலா் பேட்ரிக், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன், வட்டாட்சியா் செல்வக்குமாா், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலா் பொ்சியாள் ஞானமணி மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com