தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 அலகுகளில் உற்பத்தி பாதிப்பு

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வியாழக்கிழமை 4 அலகுகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வியாழக்கிழமை 4 அலகுகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கு தலா 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன் மூலம் நாள்தோறும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்றுவருகிறது. பழுது மற்றும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இங்கு உற்பத்தி அடிக்கடி பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், போதிய நிலக்கரி இல்லாததால் வியாழக்கிழமை 4 அலகுகளில் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. முதல் அலகில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுகிறது.

கோடைக்காலம் என்பதால் மின் தேவையைக் கருத்தில் கொண்டு 5 அலகுகளிலும் மின் உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com